TET தேர்வர்கள் கவனத்திற்கு…, நியமனத் தேர்வு ரத்தா?? வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
TET தேர்வர்கள் கவனத்திற்கு..., நியமனத் தேர்வு ரத்தா?? வெளியான முக்கிய அறிவிப்பு!!
TET தேர்வர்கள் கவனத்திற்கு..., நியமனத் தேர்வு ரத்தா?? வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு வாரியமானது, தகுதி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தகுதித் தேர்வானது, TET 1 மற்றும் TET 2 என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதில், தேர்ச்சி அடையும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்காகவும் தேர்வு ஒன்றை எழுத வேண்டும் என அரசு அறிவித்திருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த பணி நியமன தேர்வை ரத்து செய்து, தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தோருக்கு பணி வழங்கிட வேண்டி பல்வேறு போராட்டங்களை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், கடந்த மே 22ம் தேதியில் நடைபெற்ற ஆசிரியர் தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர் பணி நியமனத் தேர்வு நடத்துவது தொடர்பான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோடை காலத்தில் மின்தடை ஏற்பட்டால் இதை செய்யுங்கள்.., மின் வாரியம் அதிரடி அறிவிப்பு!!

அதாவது, ஆசிரியர் தேர்வு வாரியமானது புதிதாக இணையதளப் பகுதியை https://www.trb.tn.gov.in/syllabus_view.php?tid=STC-12&language=LG-1&status=Active உருவாக்கி உள்ளது. இதில், நியமனத் தேர்வு (இரண்டாம் நிலை) எழுத உள்ள ஆசிரியர்களுக்கான பாடத்திட்டம் என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இதற்கான, பாடத்திட்டம் (சிலபஸ்) விரைவில் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் TET தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு பணி நியமனத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என தெரிய வருகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here