TNPSC தேர்வுக்கு தயாராக்குறீங்களா., அப்போ இந்த 12 வினாக்களுக்கு மட்டும் பதில் தெரியுதான்னு செக் பண்ணிக்கோங்க!!

0
TNPSC தேர்வுக்கு தயாராக்குறீங்களா., அப்போ இந்த 12 வினாக்களுக்கு மட்டும் பதில் தெரியுதான்னு செக் பண்ணிக்கோங்க!!
TNPSC தேர்வுக்கு தயாராக்குறீங்களா., அப்போ இந்த 12 வினாக்களுக்கு மட்டும் பதில் தெரியுதான்னு செக் பண்ணிக்கோங்க!!

TNPSC தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை நவம்பர் மாதம் வெளியிடப்படும் என அறிவித்ததில் இருந்து மாணவர்கள் தேர்வுக்கு தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர். இதனால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் நாங்கள் 12 முக்கிய வினா விடைகளை தொகுத்து கீழே கொடுத்துள்ளோம்.

1) ‘ஏவா மக்கள் மூவா மருந்து’ என்னும் வரி இடம்பெறும் நுால்

A) மூதுரை B)ஏலாதி C) சிறுபஞ்சமூலம் D) கொன்றை வேந்தன்

2) 41) ‘நிற்றல்” என்ற தொழிற்பெயரின் வேர்ச்சொல்

A) நின்றான் B) நில் C) நின்ற D) நின்று

3) எவ்வகை வாக்கியம்
“ஐயோ! அதிக மழையால் வீடு இடிந்ததே!”

A) செய்தி வாக்கியம் B) வினா வாக்கியம்
C) கட்டளை வாக்கியம் D) உணர்ச்சி வாக்கியம்

4) ‘ஊ’ என்ற சொல்லின் பொருளை தேர்ந்தெடு

A) இறைச்சி B) உலகம் C) உயிர் D) உயர்வு

5)பெயர்ச்சொல்லின் வகையறிதல் – நடிகன்

A) தொழிற்பெயர் B) பண்பு பெயர் C) பொருட்பெயர் D) காலப்பெயர்

6)தற்போது அருள் மற்றும் தீபக் ஆகியோரின் வயதுகளின் விகிதம் 4:3. 6 வருடங்களுக்குப் பிறகு அருணின் வயது 26. தற்போது தீபத்தின் வயது என்ன?

A)12 வயது B)15 வயது C)191/2வயது D)21 வயது

7) தந்தை மற்றும் மகனின் தற்போதைய வயதுகளின் கூடுதல் 60 வருடங்கள், 6 வருடங்களுக்கு முன்பு, தந்தையின் வயது மகனின் வயதை போல் 5 மடங்கு எனில் 6 வருடங்களுக்குப் பிறகு மகனின் வயது என்ன?

A)12 வருடங்கள் B) 14 வருடங்கள் C)18 வருடங்கள் D) 20 வருடங்கள்

8) 1878 ம் ஆண்டு சுதேசி மொழியில் பத்திரிகை சட்டத்தை கொண்டு வந்தவர் யார்

A) கானிங் பிரபு B) ரிப்பன் பிரபு C) லிட்டன் பிரபு D) கர்சன் பிரபு

9) முகலாய வம்சத்தின் கடைசி பேரரசர்

A) இரண்டாம் பகதூர் ஷா B) முதலாம் பகதூர் ஷா
C) இரண்டாம் பாஜிரா D) அயோத்தி நவாப்

10) 1857 ஆம் ஆண்டு மாபெரும் கிளர்ச்சியை ஆங்கில வரலாற்று அறிஞர்கள் எவ்வாறு வர்ணித்தனர்?

A) படைவீரர்கள் கிளர்ச்சி B) முதல் சுதந்திரப் போர்
C) பெரும் கலகம் D) சுதந்திர போராட்டம்

11) எலுமிச்சை தாவரத்தில் நோய் உண்டாக்கும் பாக்டீரியாவின் பெயர் என்ன?

A) சேந்தோமோனாஸ் சிட்ரி B) சேந்தோமோனாஸ் ஓரைசே
C) எர்வினியா கேரட்டோவோரா D) சூடோமோனாஸ் சோலனேஸீயேரம்

12) ————– எனப்படுவது ஆல்காக்களில் காணப்படும் சிகப்பு நிற நிறமியாகும்.

A) பைக்கோ எரித்திரின் B) ஃபைக்கோ சயனின் C) A.B சரி D)A.B தவறு

மேலே கொடுத்துள்ள வினாக்களுக்கு பதிலளித்து தேர்வுக்கு நீங்கள் எந்த அளவிற்கு தயாராக இருக்கிறீர்கள் என்பதை செக் பண்ணி கொள்ளுங்கள். இதுபோன்ற முக்கிய வினாவிடைகளை, தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு பிரபல EXAMDAILY நிறுவனம் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. கீழே கொடுத்துள்ள லிங்கை க்ளிக் செய்து நீங்களும் இப்பயிற்சியில் சேர்ந்து, தேர்வில் வெற்றி பெறுங்கள்.

மேலும் விவரங்களுக்கு

Call us at 8101234234

விடைகள்:

1) D) கொன்றை வேந்தன்
2)B) நில்
3)D) உணர்ச்சி வாக்கியம்
4) A) இறைச்சி
5) A) தொழிற்பெயர்
6) B)15 வயது
7) D) 20 வருடங்கள்
8) C) லிட்டன் பிரபு
9)A) இரண்டாம் பகதூர் ஷா
10)A) படைவீரர்கள் கிளர்ச்சி
11)A) சேந்தோமோனாஸ் சிட்ரி
12)A) பைக்கோ எரித்திரின்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here