TNPSC குரூப் 4 தேர்வுக்காக தேர்வர்கள் அனைவரும் தங்களை தீவிரமாக தயார்படுத்தி கொண்டு வருகின்றனர். இத்தகைய தேர்வர்களுக்கு பயன்பெரும் வகையில், கடந்த TNPSC குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட முக்கியமான 12 வினாக்களை தொகுத்து கீழே கொடுத்துள்ளோம். இதனை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
1) இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் முதல் ஆய்வாளர் யார்?
A) சார்லஸ் மேசன் B) அலெக்சாண்டர் பர்னஸ் C) அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் D) சர் ஜான் மார்ஷல்
2) தொல்காப்பியம் குறிப்பிடும் “நிறை மொழி மாந்தர்” யார்??
A) தேவர்கள் B) அரசர்கள் C)சித்தர்கள் D) புலவர்கள்
3) 10 விவசாயிகள் 21 நாள்களில் ஒரு நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில் அதே நிலத்தை 14 விவசாயிகள் எத்தனை நாட்களில் உழுது முடிப்பர்?
(A) 14 நாட்கள் (B) 15 நாட்கள் (C) 16 நாட்கள் (D) 17 நாட்கள்
4. ‘வளன்’ என்ற சொல்லால் குறிக்கப்படுவர் யார்?
(A) தாவீது
(B) கோலியாத்து
(C) சூசையப்பர்
(D) சவுல் மன்னன்
5. அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்பு தந்தையின் வயதானது அருணின் வயதைப் போல மும்மடங்காக இருந்தது. தற்போது தந்தையின் வயது
(A) 24 ஆண்டுகள் (B) 36 ஆண்டுகள் (C) 48 ஆண்டுகள் (D) 50 ஆண்டுகள்
6. “சூலியல் வின்சோன்” பாராட்டிய தமிழறிஞர்
(A) திரு.வி.க. (B)மறைமலையடிகள் (C) உ.வே.சா. (D)கவிமணி
7. ரிக்வேத காலத்தில் அரச குமாரர்களுக்கு கற்பிக்கப்பட்ட போர்க்கலை இவ்வாறு அழைக்கப்பட்டது
A) சாம வேதம் (B) தனுர் வேதம் (C) அதர்வ வேதம் (D) வருண வேதம்
8. கைகள் நீட்டப்பட்ட நிலையில் சுழலும் நாற்காலியின் மீது அமர்ந்திருக்கும் ஒருவர். திடீரென கைகளை மடக்கும் போது கோணத் திசைவேகம்
(A) குறையும் (B) அதிகமாகும் (C) கழியாகும் (D) மாறாமல் இருக்கும்
9. எந்த நாட்டின் அணுதுளைக்காத சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது
(A) இங்கிலாந்து
(B) சிங்கப்பூர்
(C) உருசியா
(D) இந்தியா
10. 3(t-3) =5(2t+1) எனில் t =?
(A) -2
(B) 2
(C) -3
(D) 3
11. தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி என்னும் புகழைப் பெற்றவர் யார்?
(A) இராணி மங்கம்மாள்
(B) ஜான்சி ராணி
(C) தில்லையாடி வள்ளியம்மை
(D) வேலுநாச்சியார்
12. குறுந்தொகை நூலின் ‘பா’ – வகை யாது?
(A) கலிப்பா
(B) வஞ்சிப்பா
(C) வெண்பா
(D) அகவற்பா
இவ்வாறு முக்கிய பகுதிகளில் இருந்து கேட்கப்படும் வினாக்கள் மற்றும் அது தொடர்பான விளக்கங்கள் என குரூப் 4 தேர்வுக்குரிய அனைத்தையும் பிரபல Examsdaily நிறுவனம் பயிற்சி வகுப்புகள் வடிவில் அனுபவம் நிறைந்த ஆசிரியர்களை கொண்டு வழங்கி வருகிறது. ரூ. 7,500 மதிப்பிலான இந்த பயிற்சி வகுப்புகளை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ள கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்வுக்கு தயாராகுங்கள். மேலும், விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.
Call us at 8101234234
விடைகள்:
1. (C) அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்
2. (C) சித்தர்கள்
3. (B) 15 நாட்கள்
4. (C) சூசையப்பர்
5. (C) 48 ஆண்டுகள்
6. (C) உ.வே.சா.
7. (B) தனுர் வேதம்
8. (B) அதிகமாகும்
9. (C) உருசியா
10. (A) -2
11. (A) இராணி மங்கம்மாள்
12. (D) அகவற்பா