அரசு நடத்தும் TNPSC குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்…, இந்த தேதியில் இருந்து துவக்கம்!!

0
தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள சுமார் 6244 பணியிடங்களை நிரப்புவதற்கான TNPSC குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. வரும் பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் தேர்வர்கள் மும்முரமாக விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கான தேர்வு வரும் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற உள்ளதால், இந்த குறுகிய காலத்தில் தேர்வர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள அரசே இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
இதன்படி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையங்களில், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வேலை நாட்களில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இதனை நேற்று (பிப்ரவரி 8) அமைச்சர் கணேசன் சென்னையில் தொடங்கி வைத்தார். இந்த இலவச பயிற்சி வகுப்புகளை போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற வேண்டும் எனவும் அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here