TNPSC குரூப் 4 தேர்வு முடிவு…..,கட் ஆப் குறைய வாய்ப்பு….,

0

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என்று தேர்வர்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்துள்ளது.

குரூப் 4 தேர்வு முடிவு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் குரூப் 4 போட்டித்தேர்வை நடத்தியது. சுமார் 7000 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வை லட்சக்கணக்கானவர்கள் எழுதி இருந்தனர். இப்போது, தேர்வு நடைபெற்று பல மாதங்கள் கடந்துள்ள நிலையில் முடிவு இன்னும் அறிவிக்கப்படாதது குறித்து தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில், #WeWantGroup4Results எனும் ஹேஸ்டேக் சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையில், குரூப் 4 பதவிகளில் காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது, கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து குரூப் 4 தேர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 15 ஆயிரம் பணியிடங்களுக்கு வெறும் 7000 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளதாக சொல்லப்பட்டது.

“DADA” படத்தின் வெற்றியை தொடர்ந்து மலமலவென சம்பளத்தை கூட்டிய பிக்பாஸ் கவின்… எவ்வளவு தெரியுமா.?

இதற்கு முன்னதாக, கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் சுமார் 10 ஆயிரம் பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்பட்டது. அதனால், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்விலும் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகளின் படி, ஒருவேளை பணியிடங்கள் கூடுதலாக அறிவிக்கப்பட்டால் கட் ஆப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here