TNPSC தேர்வாணையம் வருடா வருடம் பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டி தேர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2A வில் உள்ள மொத்தம் 5000 க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு மே மாதம் முதனிலைத் தேர்வு நடைபெற்ற நிலையில் அதில் தேர்ச்சி பெற்றோருக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு நடைபெற்றது.
தேர்வு முடிந்து 9 மாதங்கள் கடந்தும் இன்னும் முடிவுகள் வெளியாகவில்லை. இதனால் தேர்வர்கள் முடிவை எதிர்நோக்கி உள்ளனர். இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்வர்களின் நலன் கருதி விரைவில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். இனியும் TNPSC தேர்வாணையம் காலதாமதம் செலுத்தினால் அது தேர்வர்களின் மனநிலையை பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.