
TNPSC தேர்வாணையம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2A வில் உள்ள மொத்தம் 5000 க்கும் மேற்பட்ட பணியிடங்களை வெளியிட்ட நிலையில் அதற்கான முதனிலைத் தேர்வு கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. அதன் பின் தேர்ச்சி பெற்றோருக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு நடைபெற்று 9 மாதங்கள் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.
Enewz Tamil WhatsApp Channel
இதனால் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூட நேற்று தேர்வர்களின் நலன் கருதி விரைவில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு குரூப் 2 தேர்வு முடிவு கலந்தாய்வு 80% முடிவடைந்துவிட்டது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் மீதமுள்ள பணிகள் முடிக்கப்பட்டு 6,000 பேருக்கு விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தீபாவளியை தொடர்ந்து இந்த வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு., அரசு முக்கிய அறிவிப்பு!!