TNPSC குரூப் 2/2A முதன்மை தேர்வுக்கு 5.8% பேர் தேர்வு.,, முழு விவரம் இதோ!!

0
TNPSC குரூப் 2/2A முதன்மை தேர்வுக்கு 5.8% பேர் தேர்வு.,, முழு விவரம் இதோ!!
TNPSC குரூப் 2/2A முதன்மை தேர்வுக்கு 5.8% பேர் தேர்வு.,, முழு விவரம் இதோ!!

TNPSC குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

TNPSC குரூப் 2/2A :

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதற்கு குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. இந்த வகையில் கடந்த மே மாதம் 21 ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி சார்பில் குரூப் 2, 2ஏ தேர்வு நடைபெற்றது. இதையடுத்து இந்த தேர்வுக்கான முடிவுகள் ஜூன் கடைசி வாரத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இட ஒதுக்கீடு வழக்கு காரணமாக தாமதமானது. இதனால் தேர்வர்கள் பெரும் கவலை அடைந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து நேற்று குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது. மேலும் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.tnpsc.gov.in/ வாயிலாக தேர்வர்கள் தங்கள் முடிவுகளை செக் செய்யலாம் மற்றும் குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிப்ரவரி 25, 2023ல் முதன்மை தேர்வு நடத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் குரூப் 2, 2ஏ தேர்வு எழுதிய 9,94,840 பேரில் 57,641 பேர் முதன்மை தேர்வுக்கு தேர்ச்சி பெற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக மக்களே உஷார்.,நாளையும், அதன் மறுநாளும் மிக கவனம்!11 மாவட்டங்களுக்கு பகீர் எச்சரிக்கை!!

அதாவது 5.8% தேர்ச்சி பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முதன்மை எழுத்துத் தேர்வுக்கு, விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ. 200/- (இருநூறு ரூபாய்) வரும் டிசம்பர் 16ம் தேதிக்குள் இ-சேவை மையத்தில் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here