TNPSC தேர்வாணையம் குரூப் 2 & குரூப் 2A தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வை கடந்த பிப்ரவரி மாதம் நடத்தியது. சென்னை, மதுரை உள்ளிட்ட தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள் பதிவெண்கள் மாறி இருந்ததால், அதை சரி செய்யும் பணிகளில் தேர்வு கண்காணிப்பாளர் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த ஒரு மணி நேரம் தேர்வர்கள் வெளியில் இருந்ததால், பலரும் வினாக்கான விடைகளை செல்போன் மூலம் தெரிந்து கொண்டதாக விருதுநகரை சேர்ந்த கருப்பையா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் புகார் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
மேலும் அன்று மதியம் தொடங்கப்பட்ட தேர்வில் வினாத்தாள் வாசிப்பதற்கான 15 நிமிட கால அவகாசமும் வழங்கவில்லை. எனவே மதியம் நடந்த பொது அறிவு தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக விசாரித்த நீதிபதிகள், “மனுதாரர் தேர்வெழுதிய மையங்களின் CCTV காட்சி மற்றும் TNPSC தரப்பில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளையும் TNPSC செயலாளர் மற்றும் தேர்வு மைய பொறுப்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.” எனக்கூறி வழக்கை செப்டம்பர் 3வது ஒத்தி வைத்தார்.
சுற்றுலா பயணிகளே உஷார்.., இந்த அருவிக்கு செல்ல தடை.., வெளியான பகீர் அறிவிப்பு!!!