TNPSC குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுக்கு தடை?? நீதிபதிகள் அதிரடி உத்தரவு!!!

0
TNPSC குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுக்கு தடை?? நீதிபதிகள் அதிரடி உத்தரவு!!!
TNPSC குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுக்கு தடை?? நீதிபதிகள் அதிரடி உத்தரவு!!!

தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் குரூப் 1 போட்டி தேர்வை TNPSC தேர்வாணையம் அறிவித்தது. இதற்கான முதல் நிலை தேர்வு நவம்பர் மாதம் நடத்தப்பட்டதில் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 28ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவுக்கு தடை கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தேர்வர் லட்சுமண குமார் புகார் மனு சமர்ப்பித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதில் “குரூப் 1 முதல் நிலை தேர்வுக்கான உத்தேச வினா விடையில் தவறு இருந்தால் அல்லது ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க தேர்வாணையம் அவகாசம் வழங்கியது. குறிப்பிட்ட காலத்திற்குள் உரிய ஆதாரங்கள் இணைப்புடன் 19 வினாக்களின் விடை தவறுதலாக உள்ளது என ஆன்லைனில் ஆட்சேபனை தெரிவித்து இருந்தேன். அதை வல்லுநர் குழு பரிசீலிக்காமல் தேர்வு முடிவுகளை ஏப்ரல் 28ம் தேதி வெளியிட்டது. எனவே இந்த தேர்வு முடிவுக்கு தடை விதிக்க வேண்டும்.” என குறிப்பிட்டு இருந்தார்.

TNPSC குரூப் 4 தேர்வில் 10,117 பணியிடங்களுடன் கூடுதலாக பணியிட அறிவிப்பு?? முக்கிய தகவல்!!!

புகார் மனுவை விசாரித்த நீதிபதிகள், “இந்த வழக்கு தொடர்பான விரிவான விளக்கங்களை TNPSC செயலாளர் தெரிவிக்க வேண்டும்.” என கூறி ஜூன் 19ம் தேதி வழக்கை ஒத்தி வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here