தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையத்தின் மூலம் குரூப் 1, 2, 2A, 4 போன்ற தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் கூடிய விரைவில் குரூப் 4, குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாக உள்ளது. இந்நிலையில் TNPSC குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை அதிகரிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் ஹிதாயத்துல்லா தெரிவித்துள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இவர் கூறியதாவது முந்தைய கலைஞர் ஆட்சியின் போது குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பு 35 லிருந்து 40 ஆக இருந்தது. ஆனால் அதன் பின் ஆட்சிக்கு வந்த அதிமுகவினர் அதை 35 ஆக குறைத்தனர். இதனால் 35 முதல் 40 வயதில் இருந்தவர்கள் தேர்வுக்கு தயாராகிய நிலையில் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் மற்ற மாநிலங்களில் வயது வரம்பு 40 முதல் 45 வரை உள்ளது. அதே போன்று தமிழகத்திலும் TNPSC குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை அதிகரிக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.