டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு – மாற்று தேதியை அறிவித்து அறிவிப்பு வெளியிட்ட தேர்வு கட்டுப்பாடு அதிகாரி!!

0

தமிழகத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று  நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.

தேர்வு தேதி மாற்றம் :

தமிழக அரசின் அரசு துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, டிஎன்பிஎஸ்சி தேர்வு இயக்குனரகம் வாயிலாக ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, வருகிற ஜனவரி 9 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு 11ம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் ஏற்கனவே தரவிறக்கம் செய்த, ஹால் டிக்கெட்டை பயன்படுத்தி  11ம் தேதி நடக்கும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போக, கட்டிடக்கலை மற்றும் திட்ட உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு திட்டமிட்டபடி நாளை நடக்கும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண்குராலா தெரிவித்துள்ளார். வருகிற ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், இந்த தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here