ஐபிஎல் போல TNPL லிலும் ஏலமா?? புது பொலிவுடன் அடுத்த சீசன்…, வெளியான தகவல்!!

0
ஐபிஎல் போல TNPL லிலும் ஏலமா?? புது பொலிவுடன் அடுத்த சீசன்..., வெளியான தகவல்!!
ஐபிஎல் போல TNPL லிலும் ஏலமா?? புது பொலிவுடன் அடுத்த சீசன்..., வெளியான தகவல்!!

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் லீக் போல, தமிழகத்தில் TNPL லீக் தொடர் கடந்த 2016ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.இதுவரை 6 சீசனை கடந்துள்ள இந்த லீக் தொடரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. மேலும், கடந்த சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஐபிஎலுக்கு வீரர்களை ஏலத்தில் எடுப்பது போல், எட்டு அணிகள் பங்கு பெற்று விளையாடும் TNPL லீக் தொடரும் மாற போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, TNPLலின் 7 வது சீசனானது, 2023 ல் ஜூன்-ஜூலை மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த லீக்கில், விளையாடும் வீரர்களை தேர்வு செய்ய ஏலமானது அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியன் சூப்பர் லீக்: ஒடிசா அணியை வீழ்த்திய கேரளா…, கடைசி நேரத்தில் திரில் வெற்றி!!

இதில், ஒவ்வொரு அணியும் 70 லட்சம் பர்ஸ் வைத்திருக்கும் வகையில் வீரர்கள் ஏலம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும், எதிர்வரும் சீசனில் முடிவை மறு ஆய்வு செய்யும் டிஆர்எஸ் முறையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், TNPLலும், இந்தியாவில் பிரபலமான ஐபிஎல் தொடர் போல புதிய உச்சத்தை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here