நெருங்கும் கோடை காலம்., தமிழகத்தில் அதிகரிக்கும் மின் தட்டுப்பாடு? அமைச்சர் திடீர் ஆலோசனை!!

0
நெருங்கும் கோடை காலம்., தமிழகத்தில் அதிகரிக்கும் மின் தட்டுப்பாடு? அமைச்சர் திடீர் ஆலோசனை!!
நெருங்கும் கோடை காலம்., தமிழகத்தில் அதிகரிக்கும் மின் தட்டுப்பாடு? அமைச்சர் திடீர் ஆலோசனை!!

தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி வருவதால், ஏற்படும் மின் தட்டுப்பாட்டை சமாளிக்க மின் துறை அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

திடீர் ஆலோசனை:

தமிழகத்தில் கடந்த ஆண்டு மின் பயன்பாட்டாளர்கள், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. மின் கட்டணங்களில் ஏற்படும் குளறுபடியை தடுக்கவும், இலவச மின் மானியம் பெறுவோரை கணக்கெடுக்கவும் இந்தப் பணியை மேற்கொண்டதாக அரசு விளக்கம் அளித்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் நாள்தோறும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மின் தேவை அதிகம் ஏற்படும் என்பதால், பல இடங்களில் மின் தட்டுப்பாடு நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது, இந்த வருட கோடை காலத்தை சமாளிப்பது மற்றும் மின் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுப்பது குறித்த முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மாதம் ரூ.1000 உதவித்தொகை திட்டம்., உடனே இதை முடிங்க! அரசு அறிவிப்பு!!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மின்வாரிய அலுவலர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதையடுத்து, விரைவில் மின் தட்டுப்பாடை போக்குவது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here