தமிழகத்தில் மின்கட்டணம் உயர வாய்ப்புள்ளதா?? முழு விபரம் இதோ!!

0

நடப்பு நிதியாண்டிற்கான மின்கட்டணத்தை முடிவு செய்யும் மனுவை மின்வாரியம், மின்சாரம் ஒழுங்குமுறை வாரியத்திடம் சமர்ப்பிக்கவில்லை.  ஆதலால் நடப்பு நிதியாண்டில் மின் கட்டணம் உயர வாய்ப்பில்லாததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மின் வாரியம் விளக்கம்:

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டுக்கான நிதியாண்டில் மின்கட்டணம் உயர்வு போன்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும்.  இதனை மின்சாரம் ஒழுங்கு முறை வாரியம் வெளியிடும்.  அதுமட்டுமல்லாமல் மின்வாரியத்தின் செயல்பாட்டையும் கண்காணித்து வருகின்றது. ஒவ்வரு ஆண்டும் மின் வாரியம் தனது வரவு,  செலவு, தங்களது தேவை, மின்கட்டணம் தேர்வு போன்ற  மனுவை மின்சாரம் ஒழுங்கு வாரியத்திடம் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் கொடுத்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதனை ஆராய்ந்து மின்சாரம் ஒழுங்கு  வாரியம் வரவை விட செலவு கூடினால் மின்கட்டணத்தை அதிகரித்து அதனை அமல்படுத்த மக்களிடம் கருத்து கேட்டு வந்தனர்.  அதன் பின் ஏப்ரல் மாதம் முதல் அந்த புதிய மின் கட்டணம் அமலுக்கு வரும். மேலும் மின்வாரியம் சுமார் 1 லட்சம் கோடிக்கு மேல் கடனில் உள்ளதாக கூறப்படுகிறது.

அரசியல் கட்சியில் இணைவது நிச்சயம், விரைவில் அறிவிப்பு வெளியாகும்!!

இந்நிலையில் கடந்த ஆண்டில் மின்கட்டணம் உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.  அதனால் கடந்த ஆண்டில் மின்கட்டணத்தில் ஏதும் மற்றம் இல்லை. இந்நிலையில் இந்த ஆண்டில் மின்கட்டணம் உயரும் என்று எதிர்பார்த்த நிலையில் மின்வாரியம் இன்னும் மின்கட்டண உயர்வுக்கான மனுவை மின்சார ஒழுங்கு வாரியத்திடம் சமர்ப்பிக்கவில்லை.  அடுத்த ஆண்டு நடைபெற உள்ள  சட்டப்பேரவை தேர்தலுக்காக தமிழக அரசு இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here