மின் இணைப்புடன் ஆதார் இணைப்பை 100% முடித்த முதல் மாவட்டம் இதுதான்., வெளியான அறிவிப்பு!!

0
மின் இணைப்புடன் ஆதார் இணைப்பை 100% முடித்த முதல் மாவட்டம் இதுதான்., வெளியான அறிவிப்பு!!
மின் இணைப்புடன் ஆதார் இணைப்பை 100% முடித்த முதல் மாவட்டம் இதுதான்., வெளியான அறிவிப்பு!!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் 100% பணிகளை முடித்த, முதல் மின் பகிர்மான கழகம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வெளியான அறிவிப்பு:

தமிழகத்தில் மின் பயன்பாட்டாளர்கள், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. இதற்கான காலக்கெடு வருகிற மார்ச் 31 ஆம் தேதிக்குள் நிறைவடையவுள்ளது. இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், இந்த இணைப்பை செய்து முடித்துள்ளதாக சமீபத்தில் மின்வாரிய துறை அறிவித்திருந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இலவச மின்சாரம் மற்றும் மின் மானியம் பெறுபவர்கள் குறித்து ஆராயவும், மின் கட்டணத்தில் ஏற்படும் குளறுபடிகளை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சமீபத்தில் அரசு விளக்கம் அளித்திருந்தது.

நெட்ப்ளிக்ஸ் வாடிக்கையாளர்களே.., உங்க பாஸ்வேர்டு பத்திரம்.., இனிமே எக்ஸ்ட்ரா பணம் கட்டணும்!!!

இந்த நிலையில், தமிழகத்தில் முதலாவதாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மின் பகிர்மான கழகம் 100% இந்த பணிகளை முடித்துள்ளதாக, மின்வாரிய துறை அறிவித்துள்ளது. விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பயன்பாட்டாளர்களும், இந்த இணைப்பை செய்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here