தமிழக மின் ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு., ஆனா அடுத்த ஷாக் ரெடி? அதிர்ச்சியில் மக்கள்!!

0
தமிழக மின் ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு., ஆனா அடுத்த ஷாக் ரெடி? அதிர்ச்சியில் மக்கள்!!
தமிழக மின் ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு., ஆனா அடுத்த ஷாக் ரெடி? அதிர்ச்சியில் மக்கள்!!

தமிழகத்தில் மின் ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்த இருந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின் பெயரில் இந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போராட்டம் ஒத்திவைப்பு :

தமிழகத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள், நேற்று போராட்டத்தை அறிவித்தனர். ஆனால் இந்தப் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததால், இந்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக மின் ஊழிய சங்கப் பிரதிநிதிகள் அறிவித்திருந்தனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இது ஒரு புறம் இருக்க புதுவையில், மின் கட்டணத்தை உயர்த்துவதாக அரசு அறிவித்துள்ளது. 1 யூனிட் முதல் 100 யூனிட் வரையிலான கட்டணத்தை ரூபாய் 1.90 லிருந்து ரூ.2.30 உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 101 முதல் 200 யூனிட் வரையிலான மின் கட்டணத்தை ரூபாய் 2.90களில் இருந்து 3.30தாகவும், 201 முதல் 300 யூனிட் வரையிலான கட்டணத்தை ரூ.5 லிருந்து ரூ.5.45ஆக உயர்த்துவதாகவும் அரசு அறிவித்துள்ளது.

கவர்னர் உரையை ஏற்க கூடாது., முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்., போராட்டத்தில் சென்னை மாணவர்கள்!!

இதே போல் வர்த்தகரீதியான மின் பயன்பாட்டு கட்டணமும், ரூ. 5.70 லிருந்து 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த செய்தி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here