
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பல்வேறு இடங்களிலும் மழைப்பொழிவு அதிகரித்து வருகிறது. இதனால் சாலைகளில் நீர் தேங்கி ஏதேனும் விபத்து ஏற்பட கூடாது என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தொடர் மழை காரணமாக மின்சார வயர்கள் மற்றும் மின்மாற்றிகளில் ஏதேனும் பழுது ஏற்பட வாய்ப்புள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
எனவே இது போன்று ஏதாவது பகுதிகளில் அசாதாரண நிலையை பொதுமக்கள் பார்க்க நேரிட்டால் மின்வாரியத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி 94987 94987 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.