தமிழகத்தில் இவர்களுக்கான மின் கட்டணம் குறைப்பு., கோரிக்கையை ஏற்று அரசு அதிரடி முடிவு!!

0
தமிழகத்தில் இவர்களுக்கான மின் கட்டணம் குறைப்பு., கோரிக்கையை ஏற்று அரசு அதிரடி முடிவு!!
தமிழகத்தில் இவர்களுக்கான மின் கட்டணம் குறைப்பு., கோரிக்கையை ஏற்று அரசு அதிரடி முடிவு!!

தமிழகத்தில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட மின் கட்டணம், அவர்களின் கோரிக்கையை ஏற்று குறைக்கப்பட்டுள்ளதாக மின் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

அமைச்சர் அறிவிப்பு:

தமிழகத்தில், கடந்தாண்டு மின் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டது. வழக்கம்போல் 100 யூனிட் இலவசம் மின்சாரம் பெறுவோர், சிறு குறு விவசாயிகள் மற்றும் மின் மானியம் பெறுவோருக்கு இலவச கட்டணம் அளிக்கப்படும் என மின்வாரியம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து புதிய கட்டண விதிகளின்படி, தற்போது மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதுபோக, வாடிக்கையாளர்கள் தங்கள் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் எனவும், இல்லையெனில் மின் கட்டணம் செலுத்த முடியாது எனவும் அரசு எச்சரித்திருந்தது. இது ஒரு புறம் இருக்க தற்போது மின் துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக ரயில்வே பணியாளர்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.., மேலாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

அதாவது, கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் தங்கள் மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் எனத் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இவர்களுக்கான மின் கட்டணத்தை குறைப்பதாக அமைச்சர் அறிவித்துள்ளார். மாற்றி அமைக்கப்பட்ட மின் கட்டணம், இந்த மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் எனவும் உறுதியளித்துள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here