TNEB இளநிலை உதவியாளர் & மின்கணக்கீட்டாளர் தேர்வு – ஆங்கிலத்தில் நடைபெறுவதால் தேர்வர்கள் அதிர்ச்சி..!

0

தமிழ்நாடு மின்சார வாரியம் 500 இளநிலை உதவியாளர் மற்றும் 1300 மின்கணக்கீட்டாளர் பணிக்கான ஆன்லைன் தேர்வினை அறிவித்து விண்ணப்பங்களும் பெறப்பட்டன. ஆனால் தேர்வில் 80 மதிப்பெண்களுக்கான கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டும் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

20 தமிழ், 80 ஆங்கிலம்..!

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட உள்ளன. இதில் 20 வினாக்கள் தமிழ் மொழியில் இருந்தும் மீதமுள்ள 80 வினாக்கள் ஆங்கிலத்திலும் மட்டும் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

விடை தெரியாதவற்றிற்கு கருப்பு மை, இரு நிலைகளாக குரூப் தேர்வுகள் – டிஎன்பிஎஸ்சி அதிரடி உத்தரவு..!

2015ல் இரு மொழிகளிலும்..!

அனால் தமிழ்நாடு மின்சார வாரியம் 2015ல் நடத்திய தேர்வில் 80 வினாக்களுக்கான கேள்விகள் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. எனவே அந்த முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

10,276 போலீஸ் பணியிடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்படும் – தமிழக பட்ஜெட் 2020..!

இது குறித்து விளக்கமளித்த தமிழ்நாடு மின்சார வாரியம் தேர்வர்களுக்கான தகுதி பட்டப்படிப்பு என்பதால் கேள்விகள் ஆங்கிலத்தில் கேட்கப்பட உள்ளன என தெரிவித்து உள்ளனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளால் கிராமப்புற மாணவர்களின் அரசுத்தேர்வு கனவு நிரைவேறாமலே போய் விடும் என தேர்வர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here