தமிழகத்தில் பெண்கள் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்து வந்த “கலைஞர் மகளிர் திட்டம்” நாளை (செப்டம்பர் 15) அண்ணா பிறந்தநாளையொட்டி செயல்பட இருப்பதாக அறிவித்து இருந்தனர். இத்திட்டத்தின் மூலம் ரூ.1,000 உரிமை தொகையை பெற ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களது வங்கி கணக்கில் ஒரே நேரத்தில் பணம் செலுத்தினால், ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
எனவே இன்று (செப்டம்பர் 14) முதலே தகுதியானவர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை காலை 10 மணிக்குள் அனைத்து பயனாளர்களுக்கும் உரிமை தொகை செலுத்தப்பட்டு விடும் என தகவல் தெரிவித்துள்ளனர்.