தமிழகத்தில் பெண்களை நிதி ரீதியாக ஊக்குவிக்கும் வகையில், மாதந்தோறும் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 15) காஞ்சிபுரத்தில் இருந்து துவக்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ் தகுதியான 1.06 கோடி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் ரூ.1,000 செலுத்துவதற்கு முன்பாக சோதனை அடிப்படையில் ரூ.1 அனுப்பி சரிபார்த்து வந்தனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதன்மூலமாகவே அரசுக்கு 1.06 கோடி செலவாக வாய்ப்புள்ளதால், 10 பைசா அனுப்பி சரிபார்க்க முடிவு செய்து அனுப்பி வருகின்றனர். இதன்பின்னர் ரூ.1,000 உரிமை தொகையும் ஒரு சிலருக்கு வரவு வைக்கப்பட்டு வருவதால், பெண்கள் உள்ளிட்ட பலரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஒருவருக்கு 5 நாட்கள் மேல் காய்ச்சல் இருந்தால் இது கட்டாயம்…, வெளியான முக்கிய அறிவிப்பு!!