தமிழகத்தில் பெண்களை நிதி ரீதியாக ஊக்குவிக்கும் வகையில், “கலைஞர் மகளிர் திட்டம்” வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்பட உள்ளது. ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மட்டுமே என அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தில், 1.70 கோடி விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இவர்களில் தகுதியான ஒரு கோடி பேரை தேர்வு செய்ய அதிகாரிகள் கள ஆய்வு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இன்னும் 6 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திட்டத்தின் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதன் முடிவில் ஒரு கோடிக்கும் மேலாக 1.30 கோடி குடும்பத்தலைவிகள் பயன்பெற இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இத்திட்டம் செயல்படுத்துவதற்கான நிகழ்ச்சி ஏற்பாடும் மும்முரம் ஆக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முழுவதும் மாற போகும் அரசு பேருந்துகள்? அமைச்சர் சிவசங்கர் அதிரடி அறிவிப்பு!!!