தமிழகத்தில் கலைஞர் மகளிர் திட்டத்தின் மூலம் நாளை (செப்டம்பர் 15) முதல் தகுதியான 1.06 கோடி குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை காஞ்சிபுரத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதனை தொடர்ந்து தகுதியானவர்களின் வங்கி கணக்கில் உரிமை தொகை செலுத்தப்படும். அதேபோல் தகுதியானவர்களுக்கு உரிமை தொகை பெறுவதற்கான பிரத்யேக ஏடிஎம் கார்டுகளும் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்க உள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் உரிமை தொகையை இந்த கார்டு மூலமே எடுத்துக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். அதன்படி முதற்கட்டமாக சென்னையில் இருந்து வேலூருக்கு 8,000 ஏடிஎம் கார்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.