தமிழகத்தில் பெண்கள் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்து வந்த “கலைஞர் மகளிர் திட்டம்” வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளன்று செயல்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற 1.63 கோடி விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இதில் தகுதியான ஒரு கோடி பேருக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஒரு கோடிக்கும் மேலானவர்கள் பயன்பெற உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதேபோல் தகுதியானவர்களுக்கு பிரத்யேக ATM கார்டுகளும் வழங்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் இத்திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 11) ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதன் முடிவில் தகுதியானவர்களின் இறுதி பட்டியல் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டுமா? நம்ம மதுரையில் வெளியான சூப்பர் அறிவிப்பு!!!