தமிழக மக்களே…, உறைய வைக்க காத்திருக்கும் பனிப்பொழிவு…, வானிலை ஆய்வு தகவல்!! 

0
தமிழக மக்களே..., உறைய வைக்க காத்திருக்கும் பனிப்பொழிவு..., வானிலை ஆய்வு தகவல்!! 

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று (பிப்ரவரி 8) முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை மாற்றம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று (பிப்ரவரி 8) முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PF பணத்தை உடனே எடுக்க வேண்டுமா?? இது இருந்தால் போதும்.., 5 நிமிடத்தில் ஆன்லைன் மூலம் எடுக்கலாம்!!!

இருப்பினும், வட தமிழகம் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் பிப்ரவரி 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் லேசான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையை பொறுத்த வரையில், வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடனே இருக்குமே தவிர அடுத்த 48 மணி நேரத்திற்கு பிறகு நகரின் சில குறிப்பிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். இந்த வானிலை மாற்றம் மீனவர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதால், எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here