தமிழக மக்களே…, அடுத்த 7 நாட்களுக்கு வானிலை இப்படி தான் இருக்கும்…, வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!!

0
சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை நிலவரம் குறித்து வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று (பிப்ரவரி 6) முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பனிமூட்டத்திற்கு வாய்ப்பு இருப்பதால் வறண்ட வானிலையை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பிப்ரவரி 10ம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையை பொறுத்த வரையில், வானம் மேகமூட்டத்துடனே இருக்குமே தவிர லேசான பனிமூட்டமும் நிலவக்கூடும். இதனால், அதிகபட்ச வெப்பநிலையை 32 டிகிரி செல்சியஸ்ஸாக தான் இருக்கும். இந்த வானிலை மாற்றம் மீனவர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதால் எச்சரிக்கை எதுவும் அளிக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here