தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெளுத்து வாங்க இருக்கும் மழை…, மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை!!

0
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெளுத்து வாங்க இருக்கும் மழை..., மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை!!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெளுத்து வாங்க இருக்கும் மழை..., மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு ஏற்பட இருக்கும் வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை மண்டல ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று (மே 29) தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனை தொடர்ந்து, மே 30ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், இந்த குறிப்பிட்ட நாட்களில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் இருக்கும் எனவும் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. இதில், சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனே இருக்கும் என்பதால் அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

குடும்ப பெண்களுக்கு ரூ.1000 இல்லை ரூ.1500.., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இத்தகைய வானிலை மாற்றத்தால் மே 30 மற்றும் 31ம் தேதிகளில், தென் தமிழகம் மற்றும் கேரள கடலோரப் பகுதிகளிலும், இலட்ச தீவுகள் மற்றும் குமரி கடலோரப் பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். இதனை தொடர்ந்து, ஜூன் 1 மற்றும் 2ம் தேதியிலும் மன்னர் வளைகுடா, தென் தமிழக கடலோரம் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசக்கூடும். இதனால், மே 30, 31 மற்றும் ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல கூடாது என எச்சரிக்கையும் அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here