தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு…, மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை!!

0
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..., மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை!!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..., மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை!!

தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 தினங்களுக்கு ஏற்படும் மாற்றம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதாவது, இன்று (மே 26) தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனை தொடர்ந்து, நாளை (மே 27) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு பகுதியில் கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளது. மேலும், மே 28 முதல் மே 30ம் தேதி வரை தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த வரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வேலையில்லாதவர்களுக்கு உதவித்தொகை., ஜாக்பாட் அறிவிப்பு!!!

இந்த வானிலை மாற்றத்தால் மீனவர்களுக்கு மே 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை குறிப்பிட்ட சில பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, மே 26 முதல் 28ம் தேதி வரை கேரளாவின் கடலோரங்கள் மற்றும் இலட்சத் தீவுகளில் 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். இதே போல, மே 26ல் வடக்கு ஆந்திரா கடலோரங்கள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், மே 27 ல் தென் தமிழக கடலோரங்கள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளிலும், மே 28 மற்றும் 29 ல் தென் தமிழகம், மன்னார் வளைகுடா மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே மேலே குறிப்பிட்ட நாட்களில் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here