தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு…, மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!!

0
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..., மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..., மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!!

வளிமண்டல மேலடுக்கு பகுதியில் தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதியில் ஏற்படும் வானிலை அறிக்கையை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டிய நிலையில் இன்று முதல் மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப சலனம் காரணமாக, தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் உள்ள ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடும். ஆனால், சென்னையை பொறுத்த வரையில், இன்று (மே 23) மற்றும் நாளை (மே 24) வானம் மேகமூட்டத்துடனே இருக்கும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்ஸியஸாக தான் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் பயனாளர்களே., இனி தப்பு தப்பா மெசேஜ் அனுப்பினாலும் பரவாயில்லை.. சூப்பர் அப்டேட்!!!

மேலும், மே 25 முதல் மே 27ம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் தமிழக – ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 அல்லது 55 கிலோ மீட்டர் வரை வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். இதற்கிடையில், மே 26 மற்றும் 27 ம் தேதியில் இலங்கையை ஒட்டியே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியிலும் 40 முதல் 55 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், அன்றைய தினங்களில் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here