நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து மக்களே வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையமானது, வரும் நவம்பர் 14 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும், கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு அடைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று (நவம்பர் 11) முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரை கனமழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையை பொறுத்த வரையில் வானம் மேகமூட்டத்துடனே காணப்படுமே தவிர ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்யக்கூடும். இந்த வானிலை மாற்றத்தால் வரும் நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.