தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் அடிச்சு ஊத்த காத்திருக்கும் கனமழை…, வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0
தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் அடிச்சு ஊத்த காத்திருக்கும் கனமழை..., வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் அடிச்சு ஊத்த காத்திருக்கும் கனமழை..., வானிலை ஆய்வு மையம் தகவல்!!

இந்தியாவின் தெற்கு வங்கக்கடல் பகுதியிலும், இலங்கை மற்றும் அதனை ஒட்டிய உள்ள பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது நிலவி வருகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் (நவம்பர் 1) அடுத்த 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனே இருக்கும் தவிர, ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வானிலை மாற்றத்தால் மீனவர்களுக்கு எவ்வித எச்சரிக்கையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் இனி இத செஞ்சா கைது தான்…, எச்சரிக்கை விடுத்த ரயில்வே நிர்வாகம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here