தமிழக மக்களே உஷாரா இருங்க…, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! 

0
சென்னை வானிலை ஆய்வு மையமானது,, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று (பிப்ரவரி 10) முதல் பிப்ரவரி 16 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக, பிப்ரவரி 13 மற்றும் 14 ஆம் தேதிகளில், தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்த வரையில், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்ஸாக தான் இருக்குமே தவிர காலை வேலையில் பனிப்பொழிவு அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் பிப்ரவரி 10 அன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here