
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதற்கிடையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதில் குறிப்பாக, தமிழகத்தில் இன்று (நவம்பர் 19) 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதாவது, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.