தமிழக மக்களே அலர்ட்டா இருங்க…, வானிலை ஆய்வு மையம் விடுத்த அதிரடி எச்சரிக்கை!!

0
தமிழக மக்களே அலர்ட்டா இருங்க..., வானிலை ஆய்வு மையம் விடுத்த அதிரடி எச்சரிக்கை!!
சென்னை வானிலை ஆய்வு மையமானது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கிழக்கு திசை வேக மாறுபாடு காரணமாக அடுத்த ஏழு நாட்களுக்கு ஏற்பட இருக்கும் வானிலை நிலவரத்தை வெளியிட்டுள்ளது. இதன்படி, கடலோர தமிழகத்திலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (பிப்ரவரி 13) லேசான மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிப்ரவரி 14 தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகள் லேசான மழையும், வட தமிழகம், உள் தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட இடங்களில் பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. இதனை தொடர்ந்து, பிப்ரவரி 15 முதல் 19 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலையை நிலவக்கூடும். சென்னையை பொறுத்த வரையில், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை இருக்கும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னர் வளைகுடா, குமரி கடல் ஆகிய பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் பிப்ரவரி 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here