
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை TN TRB தேர்வாணையம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிட தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கான வயது கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் கீழே PDF வடிவில் (தேர்வாணைய அறிவிப்பு) கொடுக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பில் குறிப்பிட்டபடி தகுதிகளை உடையவர்கள் https://www.trb.tn.gov.in./ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று (நவம்பர் 1) முதல் 30 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இத்தேர்வில் பங்குபெற ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்- 2ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.