TRB தேர்வில் புதிய விதிமுறைகள்., 5 வருஷத்துக்கு ஒருமுறை இது மாறும்! அரசின் மாஸ்டர் பிளான்!!

0
TRB தேர்வில் புதிய விதிமுறைகள்.,5 வருஷத்துக்கு ஒருமுறை இது மாறும்! அரசின் மாஸ்டர் பிளான்!!
TRB தேர்வில் புதிய விதிமுறைகள்.,5 வருஷத்துக்கு ஒருமுறை இது மாறும்! அரசின் மாஸ்டர் பிளான்!!

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்கில் ஏற்படும் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பி வரும் டிஆர்பி தேர்வு வாரியம், பல புதிய நடைமுறைகளை அமலுக்கு கொண்டு வர உள்ளது.

புதிய வழிமுறைகள்:

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் ஆகியவற்றில் ஏற்படும் ஆசிரியர் காலி பணியிடங்களை டிஆர்பி தேர்வு மூலம் ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. தற்போது இதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. இந்த தேர்வு வாரியத்தால் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க, முக்கிய அதிகாரிகள் கொண்ட குழுவை அரசு நியமிக்க உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இது குறித்து வெளியான அறிவிப்பில், அரசின் சார்பாக நியமிக்கப்படும் இந்த குழுவில் இடம் பெற்றவர்கள் மூலம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை, பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவர படுவதுடன் கேள்வித்தாள்களின் தரம் மேம்படுத்தப்படும்.

“எங்கள் வெற்றிக்கு காரணம் இதான்” – ரகசியத்தை உடைத்த ஆட்டநாயகன் சூர்யகுமார்!!!!

இதுபோக இந்த டிஆர்பியில், புகார்கள் மற்றும் குறைகளை நாள் முழுவதும் கண்காணிக்கும் வகையில் தேர்வு கண்காணிப்பு குழு ஒன்றும் அமைக்கப்படும். 3 ஆண்டுக்கு ஒருமுறை தேர்வு கட்டணத்தை உயர்த்துவது, எந்தவித குளறுபடிகளும் இல்லாமல் தேர்வை நடத்தி முடிப்பது போன்ற அனைத்து வித பணிகளையும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகள் கவனிக்கும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here