வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள்…, சான்றிதழ் சரிபார்ப்பு இந்த தேதியில் தான் நடைபெறும்…, TRB அறிவிப்பு!!

0
வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள்..., சான்றிதழ் சரிபார்ப்பு இந்த தேதியில் தான் நடைபெறும்..., TRB அறிவிப்பு!!
ஆசிரியர் தேர்வு வாரியமானது (TRB), தகுதி மற்றும் திறமை வாய்ந்த ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் பணி அமர்த்துவதற்கான போட்டித் தேர்வுகளை நடத்துவதுடன்,  அரசு துறையில் காலியாக உள்ள வட்டார கல்வி அலுவலர்களையும் தேர்ந்தெடுத்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் வரும் 33 வட்டார கல்வி அலுவலர் காலி பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு இருந்தது.
இதன்படி, தகுதி உள்ளவர்கள் கடந்த ஜூலை 7ஆம் தேதி வரை இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி இதற்கான தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு கடந்த டிசம்பர் 4ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மிக்ஜாம் புயல் காரணமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறாததால், டிசம்பர் 14 ஆம் தேதிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here