தமிழக போக்குவரத்து துறையானது, பொது மக்களின் பயணத்தை எளிமையாக்குவதற்காக பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் அதில், ஏற்படுத்தப்பட வேண்டிய முன்னேற்றங்கள் குறித்தும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் சில முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது,
- நகரின் முக்கிய பகுதிகளில் செய்யப்பட்டு வரும் பெண்களின் கட்டணமில்லா பயணத்தை மலைப் பகுதிகளிலும் விரிவுப்படுதல்.
- புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்துவதுடன், பழைய பேருந்துகளையும் விரைவில் புதுப்பித்தல்.
- பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல்.
- போக்குவரத்துக் கழகங்களில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட சில்லறை விற்பனையகங்கள் உருவாக்குதல்.
- சூரிய மின் தகடுகள் நிறுவுதல் பணிகளை விரைவுபடுத்துதல்.
- அலுவலகங்களில் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் வைத்தல்.
- கைரேகை தொழில்நுட்ப வருகைப் பதிவேடு ஏற்படுத்துதல்.
- உதவி எண்களில் பெறப்படும் புகார்களுக்கு உடனடியாகத் தீர்வு காணுதல்.
- மழைக் காலத்தில் பொது மக்கள் இடர்பாடின்றிப் பேருந்துகளில் பயணிப்பதை உறுதிசெய்தல்.
- விபத்துகளின் எண்ணிக்கையை குறைத்தல்.
- உள்ளிட்ட நடவடிக்கைளை விரைவில் எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.