தமிழகத்தில் மீண்டும் பேருந்து போக்குவரத்து?? – முதல்வர் ஆலோசனை!!!

0

கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து தற்போது தற்காலிமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு பஸ்கள் இயக்குவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்த காரணத்தினால் கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல் மாநிலத்தில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. அரசு எடுத்த தீவிர முயற்சிகளால் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில தினங்களாக குறைந்துவருகிறது.இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தார்.

ஆனாலும் பேருந்துகள் குறித்த தளர்வுகள் ஏதும் தற்போது வரை அரசு அறிவிக்கவில்லை. மேலும் நோய்த்தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகங்கள் தயாராகி வருகின்றன. இதற்கான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கோவிட்-19 நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை வழிமுறைகளைப் பின்பற்றி பேருந்துகளை இயக்க நாங்கள் தயாராக உள்ளோம் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் கொரோனா குறைந்து வரும் நிலையில் பஸ்  சேவைகளுக்கு தளர்வுகள் வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here