அரசின் இந்த துறை ஊழியர்களின் ஓய்வு வயதை 58 ஆக குறைக்க கோரிக்கை., அரசின் முடிவு என்ன?

0
அரசின் இந்த துறை ஊழியர்களின் ஓய்வு வயதை 58 ஆக குறைக்க கோரிக்கை., அரசின் முடிவு என்ன?
அரசின் இந்த துறை ஊழியர்களின் ஓய்வு வயதை 58 ஆக குறைக்க கோரிக்கை., அரசின் முடிவு என்ன?

தமிழகத்தில் போக்குவரத்து துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ல் இருந்து 58 ஆக குறைக்க அரசுக்கு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓய்வு வயது குறைப்பு :

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 ல் இருந்து 60 ஆக உயர்த்துவதாக தமிழக அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்தது. இதையடுத்து, 2021 ஆம் ஆண்டு மே 31ஆம் தேதிக்குள் ஓய்வு பெறும் அனைத்து அரசு ஊழியர்களின் ஓய்வு வரம்பு 60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது அரசின் இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என, ஒரு சில துறை சார்ந்த ஊழியர்கள் போராடி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் போக்குவரத்து துறையை சார்ந்த நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள், மீண்டும் ஓய்வு வயது வரம்பை 58வது நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 60 வயது ஆகும்போது, தங்களுக்கு வயது சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், இதனால் பணியை சரிவர கவனிக்க முடியவில்லை என்றும் வேதனை தெரிவித்தனர்.

அதிவேகமாக பரவும் ஹாங்காங் காய்ச்சல்., இது ஒன்னு தான் தீர்வு? எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்!!!

அதுமட்டுமில்லாமல் பல பணியாளர்கள் விருப்ப ஓய்வு பெறுவதால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாகவும் கவலை தெரிவித்தனர். அரசுக்கு இது சார்ந்த கோரிக்கைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், விரைவில் அரசு இதன் இறுதி முடிவை அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here