தமிழக பேருந்துகளில் ரூ.10 & 20 நாணயங்களுக்கு தடையா? போக்குவரத்து துறை முக்கிய கண்டிஷன்!!

0
தமிழக பேருந்துகளில் ரூ.10 & 20 நாணயங்களுக்கு தடையா? போக்குவரத்து துறை முக்கிய கண்டிஷன்!!
தமிழக பேருந்துகளில் ரூ.10 & 20 நாணயங்களுக்கு தடையா? போக்குவரத்து துறை முக்கிய கண்டிஷன்!!

தமிழக அரசு பேருந்துகளில், 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை, பெற்றுக்கொண்டு மறுக்காமல் நடத்துனர்கள் பயணச்சீட்டு கொடுக்க வேண்டும் என போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.

போக்குவரத்து துறை கண்டிஷன்:

தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டி தரும் முக்கியமான துறைகளில் ஒன்று போக்குவரத்து. சமீபத்தில், மாநிலம் முழுவதும் உள்ள நகர்ப்புற பேருந்துகளில் மகளிர்க்கு இலவச பயணம் அளிக்கப்படும் என, தற்போதைய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது மகளிர்க்கு கட்டணம் இல்லா பயணம் அளிக்கப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அந்த வகையில் சமீப தினங்களாக, அரசு அறிமுகப்படுத்திய 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் தொடர்ந்து புழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால் சமீப தினங்களாக, இந்த நாணயங்கள் செல்லாது என தேவையற்ற வதந்திகள் பரவி வருகிறது.

பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்(24.11.2022)-முழு விவரம் உள்ளே!

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில் நடத்துனர்கள் பயணிகள் கொடுக்கும் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொண்டு, தகுந்த பயணச்சீட்டு கொடுக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளது. இதை மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here