தமிழக அரசானது, மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அனைத்து நடவடிக்கைகளும், சாதாரண எளிய மக்கள் முதல், மாற்றுத்திறனாளிகள், பழங்குடி வாழ் மக்கள் உள்ளிட்ட அனைவரும் பொருந்தும் படி அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், மாநகர பேருந்து வரத்து துறையானது நடத்துனர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது, மாநகர பேருந்துகளில் பயணிகள் ஏறும் போதே பயணச் சீட்டு வாங்க சில்லறை கொடுக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக நடத்துனர்கள் மீது புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றனர். இதையடுத்து, பயணிகளிடம் சில்லறை கேட்டு நிர்பந்தம் செய்யக்கூடாது எனவும், பயணிகள் கொடுக்கும் தொகையை பெற்று கனிவுடன் மீதம் உள்ள சில்லறையை வழங்க வேண்டும் எனவும் நடத்துநர்களுக்கு பேருந்துவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களே…, தீபாவளிக்கு இத்தனை நாட்கள் தான் விடுமுறை?? வெளியான முக்கிய தகவல்!!