தமிழக பேருந்தில் இது வைத்திருந்தால் இனி இலவசமாக பயணிக்கலாம்…, போக்குவரத்து துறை அறிவிப்பு!!

0
தமிழக பேருந்தில் இது வைத்திருந்தால் இனி இலவசமாக பயணிக்கலாம்..., போக்குவரத்து துறை அறிவிப்பு!!
தமிழக பேருந்தில் இது வைத்திருந்தால் இனி இலவசமாக பயணிக்கலாம்..., போக்குவரத்து துறை அறிவிப்பு!!

சமீபத்தில் நடந்த தமிழக சட்டப் பேரவையில், 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் வழங்கப்படும் என போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தமிழக அரசு இன்று அமல் படுத்தி அரசாணையையும் வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக, போக்குவரத்துறை ஆனது மாநகரப் பேருந்துகளுக்கும், ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கும் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது, 5 கிலோ எடை வரையிலான பொருட்களை மாநகரப் பேருந்துகளில் பயணி ஒருவர் கட்டணமின்றி இலவசமாக எடுத்து செல்லாம் என கூறியுள்ளது. ஆனால், 5 முதல் 20 கிலோ எடை வரையிலான பொருட்களை பயணிகள் எடுத்து செல்ல விரும்பினால், அவர்களிடம் இருந்து சுமை கட்டணமாக ரூ. 10 அல்லது ஒருவருக்குரிய பயணக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

TET தேர்வர்கள் கவனத்திற்கு…, நியமனத் தேர்வு ரத்தா?? வெளியான முக்கிய அறிவிப்பு!!

மேலும், மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக அதிக இடத்தை ஆக்கிரமிக்கும் பொருட்களை பேருந்துகளில் அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ஏற்கனவே தடை செய்யப்பட்ட பொருட்களான, எளிதில் தீப்பற்றக் கூடியவை, கடத்தல் பொருட்கள் உள்ளிட்டவைகளையும் பேருந்துகளில் அனுமதிக்க கூடாது என ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here