தமிழகத்தில் இனி இந்த பிரச்சனைக்கு வாய்ப்பில்லை – முதல்வர் ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்!!

0
மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள் நல திட்டங்கள்..
தமிழகத்தில் இனி இந்த பிரச்சனைக்கு வாய்ப்பில்லை - முதல்வர் ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்!!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில், இருக்கும் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்ய, முதல்வர் ஸ்டாலின் அதிரடி திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளார்.

ஸ்டாலின் அதிரடி:

தமிழகத்தில் சென்னை உள்பட பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. தலை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 2 வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த, மெட்ரோ ரயில் திட்டம் அடுத்த கட்டமாக, சென்னை மாதவரம்-சிப்காட் சிறுசேரி வழித்தடத்தில் அமைய உள்ளது. இதனால், சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு, ஒரு நிரந்தர தீர்வு ஏற்படும்  சூழல் உருவாகியுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தொடர்ந்து, இந்தத் திட்டத்தை மதுரை, நாகர்கோவில், தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட பெரு நகரங்களிலும் செயல்படுத்த  ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். 15-20 கி.மீ வரை, மெட்ரோ ரயில்களை இயக்க மத்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், மாநில அரசு இதற்கான அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

இதற்கான வல்லுநர் குழு விரைவில் தமிழகத்தில் ஆய்வு செய்ய உள்ளதாகவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் முதல்வர்  டெல்லி சென்று இது குறித்து பிரதமரிடம் பேச இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த மெட்ரோ திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானால், தமிழகத்தில் இனி போக்குவரத்து நெரிசல் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பது உறுதியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here