தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.,11) விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அதிரடி!!

0
school holi feature image
school holi feature image

கனமழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன மழை:

தமிழகத்தில் வருடம் தோறும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பெய்யும். அந்த வகையில் தற்போது வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தீவிரம் அடைந்துள்ளது. இதற்கிடையில் வங்கக் கடலில் தென்கிழக்கு பகுதி மற்றும் இலங்கையின் வடக்குப் பகுதி ஆகியவற்றை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது.

தமிழக VIP களின் கவனத்திற்கு – நாளை நடைபெறும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! எங்கே, எப்போ தெரியுமா?

இதன் காரணமாக தமிழகத்தில் 13ம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் நாளை (11.11.2022) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை(11.11.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்அறிவித்துள்ளார். மேலும் நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு சனிக்கிழமை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here