தமிழகத்தில் நாளை வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும் – தொழிற்சங்க பொருளாளர் நடராஜன் பேட்டி!!

0
தமிழகத்தில் நாளை வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும் - தொழிற்சங்க பொருளாளர் நடராஜன் பேட்டி!!
தமிழகத்தில் நாளை வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும் - தொழிற்சங்க பொருளாளர் நடராஜன் பேட்டி!!

மத்திய அரசை கண்டித்து பாரத் ஊழியர்கள் நடத்திய தொடர் வேலை நிறுத்தம், நாளைய தினம்  தொடர்ந்தாலும், வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும் என தொழிற்சங்க பொருளாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

முக்கிய அறிவிப்பு:

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கல், பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையை உயர்த்துதல் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மத்திய அரசை கண்டித்து, தொழிற்சங்கங்கள் 2 நாள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். இந்த தொடர் வேலை நிறுத்தம், இன்று காலை முதல் தொடங்கப்பட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பேருந்துகள் இயங்காததால், பொது மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டது. மேலும், சில பெரு நகரங்களில் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸியின் கட்டணம் இரு மடங்கு உயர்ந்தது.

இதனால், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தொழிற்சங்களுக்கு போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் வைத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட, தொழிற்சங்க பொருளாளர் நடராஜன் முக்கிய பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதாவது, இந்த ஒரு நாள் போராட்டம் வெற்றி அடைந்து விட்டதாகவும், நாளைய தினம் போராட்டம் தொடர்ந்தாலும் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் அறிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்பை அடுத்து, பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here