தமிழக TET தேர்வர்களுக்கு ஷாக் நியூஸ் – தாமதமாகும் பணி நியமனம்! இழுபறியில் ஆசிரியர்கள் நிலை!!

0
தமிழக TET தேர்வர்களுக்கு ஷாக் நியூஸ் - தாமதமாகும் பணி நியமனம்! இழுபறியில் ஆசிரியர்கள் நிலை!!
தமிழக TET தேர்வர்களுக்கு ஷாக் நியூஸ் - தாமதமாகும் பணி நியமனம்! இழுபறியில் ஆசிரியர்கள் நிலை!!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதிக்கான, டெட் தேர்வின் முதல் தாள் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், திட்டமிட்டபடி தேர்வு மற்றும் பணி நியமனம் நடக்குமா? என தேர்வர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

தேர்வர்கள் சந்தேகம் :

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பணிகளுக்கான காலி பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியமான டிஆர்பி மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கான டெட் தேர்வும், இந்தத் துறையின் கீழ் நடத்தப்படுகிறது. தற்போது, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் பணியில் இந்த வாரியம் தீவிரமாக இறங்கியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தொடர்ந்து டெட் தேர்வின் முதல் தாள், அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த இடையறாத பணிகளுக்கு மத்தியில், டிஆர்பி தலைவராக பதவி வகித்து வந்த லதா மத்திய அரசின் சுகாதார அமைச்சகப்பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனால் இந்த தலைவர் பதவி காலியாகியுள்ளது.

தமிழக பள்ளி ஆசிரியர்களின் ஓய்வு வயதில் அதிரடி மாற்றம் – கல்வித்துறை வெளியிட்ட முக்கிய சுற்றறிக்கை!!

புதிய தலைவர் நியமனத்துக்கான அரசு ஒப்புதல் இன்னும் வழங்கவில்லை. இதனால் திட்டமிட்டபடி, தேர்வு நடக்குமா? பணி நியமனம் குறித்த நேரத்தில் வழங்கப்படுமா? என்ற அச்சத்தில் தேர்வர்கள் இருந்து வருகின்றனர். அரசு அதனை விரைந்து பரிசீலிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here