தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பள்ளி கல்வித்துறை நிரப்பி வருகிறது. அந்த வகையில் 2008-09, 2009-10 மற்றும் 2010-11ஆம் கல்வியாண்டில் பட்டதாரி, முதுகலை, தலைமை ஆசிரியர் என 1512 பேர் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்டனர். இதில் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு மட்டும் (330 பட்டதாரி ஆசிரியர், 575 முதுகலை ஆசிரியர், 7 தலைமை ஆசிரியர்) கடைசியாக 31.12.2022 வரை பணிபுரிய ஆணை வழங்கப்பட்டு இருந்தது.
தமிழகத்தில் கருணை அடிப்படையில் வாரிசு வேலை., இவர்களுக்கும் உரிமை உண்டு? ஐகோர்ட் உத்தரவு!!!
தற்போது 912 தற்காலிக ஆசிரியர்களுக்கும் புதிய ஊதிய விகிதத்தில் கூடுதலாக 5 ஆண்டுகளுக்கு பணியாற்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த ஆசிரியர்கள் 01.01.2023 முதல் 31.12.2027 வரை பணியாற்றலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.’
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்