தமிழக பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்., முதல்வருக்கு பறந்த கோரிக்கை! அரசின் இறுதி முடிவு என்ன?

0
தமிழக பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்., முதல்வருக்கு பறந்த கோரிக்கை! அரசின் இறுதி முடிவு என்ன?
தமிழக பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்., முதல்வருக்கு பறந்த கோரிக்கை! அரசின் இறுதி முடிவு என்ன?

தமிழகத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் பகுதி நேர ஆசிரியர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை அனுப்பி உள்ளனர்.

அரசுக்கு கோரிக்கை:

தமிழக அரசு பள்ளிகளில், தொகுப்பு ஊதியத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 16,000க்கும் மேற்பட்ட பகுதி நேர ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆரம்பத்தில் 5,000 ரூபாய் ஊதியத்தில், பணிபுரிந்து வந்த இவர்களுக்கு தற்போது 10,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, தமிழக அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த நிலையில் தற்போது இவர்கள் அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதாவது தங்களுக்கு பின் பணியில் சேர்ந்த ஓவியம், உடற்கல்வி, இசை, தையல், கணினி ஆகிய பாடங்களை சேர்ந்த ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்துள்ள அரசு, தங்களை மட்டும் வஞ்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

விவசாயிகளுக்கு ஷாக்.,இனி உங்களுக்கு இந்த தொகை கிடையாது? மத்திய அரசு பரபரப்பு அறிக்கை!!

தேர்தல் வாக்குறுதி 181 ன் படி அரசு தங்கள் கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வேண்டும் எனவும், இதை 12 ஆயிரம் குடும்பங்களின் பிரச்சனையாக கருதி இதில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊழியர்களின் இந்த கோரிக்கைக்கு அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here